காரியாபட்டி அருகே மல்லாங்கிணரில் பள்ளி மாணவர்களுக்கு சாக்லேட் பேப்பரில் கஞ்சா விற்பனை செய்த இருவர் கைது.
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே மல்லாங்கிணர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின் படி கல்குறிச்சி சமத்துவபுரம் பைபாஸ் ஜங்ஷனில் மல்லாங்கிணறு சார்பு ஆய்வாளர் மகேஸ்வரன் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த பொழுது சந்தேகத்திற்கு இடமாக வந்த மதுரை முத்துப்பட்டி வடபழஞ்சியை சேர்ந்த வீரமணிகண்டன், விருதுநகர் மாவட்டம் சின்ன புளியம்பட்டியைச் சேர்ந்த முத்துராமன் ஆகிய இருவரையும் நிறுத்தி சோதனை செய்ததில் அவர்களிடம் இருந்து சாக்லேட் பேப்பரில் பள்ளி மாணவர்களுக்கு விற்பனை செய்வதற்காக வைத்திருந்த 1. 500 கிலோ கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு பின்னர் அவர்களை சிறையில் அடைத்தனர்.