சின்னத்தம்பிக்குடி கிராமத்தில் இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் மூவர் காயம் காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி பகுதியைச் சார்ந்தவர் காளீஸ்வரன் இவர் தனது அண்ணன் குழந்தைகள் காமினி மகேஸ்வரன் ஆகிய இருவரை அழைத்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் சின்ன கம்பி குடி கிராமத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, தர்மராஜ் என்பவர் ஓட்டி வந்த கார் அதிவேகமாகவும் ஆஜாக்கிரதையாக ஓட்டிவரப்பட்டு காளீஸ்வரன் ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் காளீஸ்வரன் மற்றும் காமினி மற்றும் மகேஸ்வரன் ஆகிய மூவருமே காயமடைந்த நிலையில், இந்த விபத்து குறித்து ஆவியூர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.