விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியைச் சேர்ந்தவர் வினோபாஜி இவர் தனது இருசக்கர வாகனத்தை காரியாபட்டி ஆசிரியர் காலணியில் உள்ள அவர் வீட்டின் முன் நிறுத்தி வைத்திருந்ததாக கூறப்படுகிறது. சிறிது நேரம் கழித்து வீட்டின் வாசல் வந்து பார்த்தபொழுது. வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 75 ஆயிரம் மதிப்பிலான புல்லட் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். உடனே பல்வேறு பகுதியில் தேடியும் இரு சக்கர வாகனம் கிடைக்கவில்லை. இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.