விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே மேலேந்தல் பகுதியில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேர்வு நடைபெற்று வரும் நிலையில் திடீரென்று ஆய்வு செய்தனர்.
கல்லூரி முதல்வராக இருக்கும் எஸ்டர் என்பவர் பணியில் இல்லாமல் இருந்துள்ளார். அவர் மீது தொடர்ந்து பல்வேறு புகார்கள் எழுந்த நிலையில் திடீரென்று அமைச்சர் மற்றும் ஆட்சியர் திடீர் ஆய்வு மேற்கொண்டதாக தெரிய வருகிறது. மாணவர்கள் நலனில் அக்கறை காட்டாத கல்லூரி முதல்வர் மற்றும் பேராசிரியர்களுக்கு எச்சரிக்கை விடுத்தார். வேதியியல் ஆய்வகத்திற்கு சென்ற அமைச்சர் அங்கு பாதுகாப்பு இல்லாமல் வைக்கப்பட்டிருந்த அமிலங்களை கண்டு அதிர்ச்சி அடைந்தார். கண்ணாடி குடுவைகள் இல்லாத காரணத்தினால் மதுபான கண்ணாடி பாட்டில்களில் வைக்கப்பட்டிருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
உதவி பேராசிரியர்களை வரவழைத்து எந்தவித பாதுகாப்பும் இல்லாமல் அமிலங்கள் வைக்கப்பட்டுள்ள கண்ணாடி பாட்டில்கள் மூடப்படாமல் உள்ளது. தவறி கீழே விழுந்தால் என்ன நிலைமை ஏற்படும் என்று பேசினார். அப்போது அமிலங்கள் வைக்கக்கூடிய கண்ணாடி குடுவைகள் இல்லாததால் இந்த மாதிரி வைக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் கேஸ் போன்றவைகள் ஆய்வகத்தில் இல்லை என தெரிவித்தனர்.
உடனே அமைச்சர் ஆட்சியரை அழைத்து கல்லூரியில் உள்ள ஆய்வகத்திற்கு தேவையான கண்ணாடி குடுவைகள் மற்றும் கேஸ் போன்ற உபகரண பொருட்கள் வழங்க நிதி வழங்க உத்தரவிட்டார்.