விருதுநகர் மாவட்டம் திருச்சுழி பகுதியில் இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சுழி, நரிக்குடி ஒன்றிய 25-வது மாநாடு நடைபெற்றது. இந்த மாநாடு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினரின் பேரணியுடன் துவங்கியது இந்த பேரணி ஆத்துப்பாலத்தில் இருந்து துவங்கி திருச்சுழி பஜார் பகுதி வழியாக பூமிநாதர் கோவில் வரை சென்று நிறைவுற்றது. அதனைத் தொடர்ந்து பூமிநாதர் கோவில் அருகே உள்ள தனியார் மண்டபத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சுழி, நரிக்குடி ஒன்றிய 25 வது மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் முன்னாள் எம்பி லிங்கம் மற்றும் முன்னாள் எம்எல்ஏ ராமசாமி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.