விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட நிர்வாகத்தின் மூலம், விருதுநகர் மாவட்ட பட்டாசு தொழிற்சாலைகளில் எதிர்பாராத விதமாக வெடி விபத்து ஏற்பட்டு பெற்றோர்களை இழந்த 63 மாணவர்களுடன் நடைபெற்ற 207-வது 'Coffee With Collector' என்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு. என். ஓ. சுகபுத்ரா மாணவர்களுடன் கலந்துரையாடி, பள்ளித் தேர்வு, உயர்கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுச்சூழலின் முக்கியத்துவம் குறித்த உரிய வழிகாட்டுதல் வழங்கினார்.