தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்கில் இயங்கி வரும் நீச்சல் குளத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் நியமிக்கப்பட்ட தலைசிறந்த நீச்சல் பயிற்றுநர்களை கொண்டு நீச்சல் பழக பயிற்சி வகுப்புகள் இளைஞர்கள் மற்றும் பொது மக்கள் அனைவருக்கும் (இருபாலருக்கும்) நடத்தப்பட உள்ளது.
நீச்சல் பழக 12 நாட்கள் பயிற்சி அளிக்கப்படும், பயிற்சி முடிந்த உடன் பயிற்சி சான்றிதழ் வழங்கப்படும். ஆகையால் இளைஞர்கள் மற்றும் பொது மக்கள் அனைவரும் இதனை பயன்படுத்தி கொண்டு அடிப்படை நீச்சல் பழகி கொள்ள இதன் மூலம் அறிவுறுத்தப்படுகிறது.
விருதுநகர் மாவட்டத்தின் அனைத்து பள்ளிஃகல்லூரி, மாணவ/மாணவியர்கள், பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் என அனைவரும் பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயனடையலாம்.
மேலும், பயிற்சி வகுப்பு நடைபெறும் நாட்கள் முதல் தொகுப்பு - 01. 04. 2025 முதல் 13. 04. 2025, இரண்டாம் தொகுப்பு- 15. 04. 2025 முதல் 27. 04. 2025, முன்றாம் தொகுப்பு- 29. 04. 2025 முதல் 11. 05. 2025, நான்காம் தொகுப்பு- 13. 05. 2025 முதல் 25. 05. 2025 மற்றும் ஐந்தாம் தொகுப்பு- 27. 05. 2025 முதல் 08. 06. 2025 ஆம் தேதி வரை வகுப்புகள் நடைபெறும். இது தொடர்பான விவரங்களை பெற -97513-93412 என்ற நீச்சல் பயிற்றுநர் அவர்களின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.