விருதுநகர் மாவட்டம், காரியாபட்டியில் உள்ள மிகவும் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் இன்று செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு முருகனுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், போன்ற அபிஷேக பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு ஆராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது.