விஷம் கலந்த உணவை சாப்பிட்டதில் ஆறு ஆடுகள் உயிரிழப்பு

66பார்த்தது
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தாலுகா இலுப்பைக்குளம் பகுதியைச் சார்ந்தவர் வைரவன் வயது 43 இவர் 80 செம்மறி ஆடுகளை மேய்த்து தொழில் செய்து வருவதாக கூறப்படுகிறது இவருடைய செம்மறி ஆடுகளை மிதிலைகுளம் கண்மாயில் மேய்க்கக்கூடாது என அந்த பகுதியை சார்ந்த நாகலிங்கம் என்பவர் வைரவனை மிரட்டியதாகவும் அதையும் மீறி அந்த ஆடுகளை மேய்த்தால் விஷம் வைத்து கொன்று விடுவதாக கூறியதாகவும் கூறப்படுகிறது அதை தொடர்ந்து அந்த கண்மாய் பகுதியில் ஆடுகள் மேய்க்க சென்ற பொழுது விஷம் கலந்த அரிசியை அங்கு வைத்ததாகவும் அதன் காரணமாக 60 ஆயிரம் மதிப்பிலான ஆறு ஆடுகள் இறந்ததாக கூறப்படுகிறது இது குறித்து வைரவன் அளித்த புகாரியின் அடிப்படையில் நாகலிங்கம் மீது நரிக்குடி காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி