சாத்தூர்: இடியுடன் பலத்த கனமழை.. சாலையில் வெள்ள பெருக்கு

76பார்த்தது
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த மழையால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சாத்தூர் நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாக கடுமையான வெயில் வாட்டி வதைத்தது. வெயிலின் கொடுமையை தாங்க முடியாமல் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி வந்தனர். 

இதனிடையே தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் பரவலாக பலத்த மற்றும் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் வழக்கம் போல், இன்று காலை வெயில் வாட்டி வந்த நிலையில், திடீரென மேகங்கள் இருண்டு, பலத்த காற்றுடன் மழை பெய்தது. சாத்தூரில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், இன்று லேசான சாரல் முதல் மிதமான மழை பெய்து வந்த நிலையில், காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. 

அதனை தொடர்ந்து சுமார் ஒரு மணி நேரமாக கனமழை கொட்டியது. கனமழையால் நகர் பகுதியிலுள்ள தெருக்கள், சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. சாத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியான இருக்கன்குடி, நென்மேனிசுத்தாளம்பட்டி, அம்மபட்டி, வெங்கடாசலபுரம், மேட்டுமலை, படதால் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பெய்த மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

தொடர்புடைய செய்தி