*காரியாபட்டி நாட்டு கோழி சந்தையில் தைப்பொங்கலை முன்னிட்டு நாட்டு கோழிகள் விற்பனை மந்தம்*
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டியில் சனிக்கிழமை தோறும் நாட்டுக்கோழிகள் சந்தை நடப்பது வழக்கம். சுற்று வட்டாரங்களில் கோழிச்சந்தை இல்லாததால் நாட்டு கோழிகளை வாங்குவதற்கு மதுரை, திண்டுக்கல், தேனி, விளாத்திகுளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து வியாபாரிகளும் மற்றும் காரியாபட்டியை சுற்றியுள்ள பல்வேறு கிராம பகுதிகளை சேர்ந்தவர்களும் வந்து காரியாபட்டியில் நாட்டு கோழிகளை வாங்கிச் செல்வது வழக்கமாக உள்ளது.
இந்நிலையில் இன்னும் இரு தினங்களில் பொங்கல் பண்டிகை வர உள்ள நிலையில் காரியாபட்டியில் இன்று நடைபெற்ற கோழி சந்தையில் வழக்கத்தைவிட நாட்டுக்கோழிகள் வாங்குவோர் எண்ணிக்கை குறைந்துள்ளது.
ஒரு நாட்டுக்கோழி விலை 500 முதல் 600 ரூபாய் வரை விற்பனையாகிறது. மற்ற நாட்களில் ரூ 20 முதல் 30 லட்சம் வரை நாட்டு கோழிகள் விற்பனையாகும் நிலையில் தற்போது ரூ 10 லட்சம் குறைவாக கோழிகள் விற்பனையாகியுள்ளது.
தற்போது கடந்த ஆண்டை விட நாட்டு கோழி விற்பனையில் மந்தம் ஏற்பட்டதால் வியாபாரிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.