விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தாலுகா ஆத்திப்பட்டியை சார்ந்தவர் முத்துசாமி. இவர் தனது இருசக்கர வாகனத்தில் அருப்புக்கோட்டை சாயல்குடி சாலையில் குள்ளம்பட்டி பகுதியில் சென்று கொண்டிருந்த பொழுது முகமது என்பவர் ஓட்டிச்சென்ற கார் அதிவேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ஓட்டிவரப்பட்டு முத்துசாமி ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோது விபத்து ஏற்பட்டது.
இதில் முத்துசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் இது குறித்து அவருடைய மனைவி அளித்த புகார் மனு அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்