மீட்பு பணிகள் நிலையத்தில் நீத்தார் நினைவு தினம் அனுசரிப்பு*

68பார்த்தது
பாம்பே விக்டோரியா துறைமுகத்தில் 1944ம் ஆண்டு ஏப்ரல் 14 இல் கப்பலில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட 71 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.

இவர்களின் நினைவாகவும், பணியின் போது வீர மரணம் அடைந்த தீயணைப்பு வீரர்கள் நினைவாகவும் ஆண்டுதோறும் ஏப்ரல் 14ஆம் தேதி உயிர் நீத்தார் தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்தில் நிலைய அலுவலர் சந்திரசேகரன் தலைமையில் உயிர் நீத்தார் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

இதில் தமிழகம் முழுவதிலும் பணியின் போது வீர மரணம் அடைந்த தீயணைப்பு வீரர்களின் திருவுருவப் படத்திற்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

அதன் பின்னர் உயிரிழந்த வீரர்களின் வீர மரணத்தை போற்றும் வகையில் நிலையஅலுவலர் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர்.

மேலும் ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் 14ஆம் தேதி முதல் ஏப்ரல் 20ம் தேதி வரை தீ தொண்டு வாரமாகவும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நாட்களில் திருச்சுழி தீயணைப்பு நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தீயணைப்பு வீரர்கள் தீ தடுப்பு சாதனங்களை முறையாக பராமரித்தல், தீ விபத்துகளை தவிர்ப்பது உள்ளிட்ட பல்வேறு வகையான விழிப்புணர்வு குறித்து செயல் விளக்கம் செய்து காண்பித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி