*வீரசோழன் பகுதியில் நரிக்குடி கிழக்கு ஒன்றிய அதிமுக சார்பில் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் 37ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு*
விருதுநகர் மாவட்டம் நரிக்குடி கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட வீரசோழன் பேருந்து நிலையம் பகுதியில் முன்னாள் முதல்வர் புரட்சித்தலைவர் பாரத ரத்னா எம்ஜிஆர் அவர்களின் 37 ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
வீரசோழன் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற நினைவு தின அனுசரிப்பில், முன்னாள் முதல்வர் புரட்சித்தலைவர் பாரத ரத்னா எம்ஜிஆர் அவர்களின் திருவுருவப் படத்திற்கு நரிக்குடி கிழக்கு ஒன்றிய கழகச் செயலாளரும், நரிக்குடி ஒன்றிய துணை சேர்மனுமான அம்மன்பட்டி ரவிச்சந்திரன் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இதனைத் தொடர்ந்து புரட்சித்தலைவரின் நினைவு தினத்தை முன்னிட்டு ஏழை மக்கள் மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானத்தினை நரிக்குடி கிழக்கு ஒன்றிய கழகச் செயலாளர் அம்மன்பட்டி ரவிச்சந்திரன் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் நரிக்குடி கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இருந்து, கிளைச் செயலாளர்கள் பிறஅணிச் செயலாளர்கள், அதிமுக ஊராட்சி மன்ற தலைவர்கள், மகளிர் அணி நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு புரட்சித்தலைவர் அவர்களின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.