புதிய பேருந்து வசதியை தொடங்கி வைத்து அமைச்சர்

53பார்த்தது
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி போக்குவரத்துக்கு சிரமப்பட்டு வெளியூரில் உள்ள பள்ளிகளுக்கு மாணவ, மாணவியர்கள் நடந்து செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. கடந்த மாதம் வருகை தந்த தமிழ்நாடு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசுவிடம் பள்ளி மாணவ, மாணவியர்கள் கோரிக்கை வைத்தனர்.
தமிழ்நாடு நிதி அமைச்சருமான தங்கம்தென்னரசு உடனே பள்ளி மாணவர்கள் நலன் கருதி பள்ளி நேரங்களில் குறிப்பிட்ட கிராமங்களில் செய்து பள்ளி மாணவர்களை ஏற்றி செல்ல வேண்டும் என போக்குவரத்து துறைக்கு உத்தரவிட்டார். இன்று முடுக்கன்குளத்தில் இருந்து N. நெடுங்குளம் புதிய வழித்தடத்தில் பேருந்தும், அதேபோல் திருச்சுழியில் இருந்து கம்பாளி, குண்டுகுளம் வழியாக துலுக்கன்குளம் கிராமத்திற்கு புதிய வழித்தடத்தில் பேருந்தையும் மற்றும் சாலைமறைக்குளத்தில் இருந்து பெரிய ஆலங்குளம் கிராமத்திற்கு புதிய வழித்தடத்தில் பேருந்தினை பள்ளி மாணவர்கள் நலன் கருதியும் அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக இன்று தமிழ்நாடு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பள்ளி மாணவர்களை வைத்தே கொடியசைத்து பேருந்தை துவக்கி வைத்து அழகு பார்த்தார்.

அப்போது பெரிய ஆலங்குளத்தில் மாணவர்களுடன் சேர்ந்து பேருந்தை துவக்கி வைத்த நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்களுடன் சேர்ந்து அரசு பேருந்தில் சுமார் மூன்று கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்து மாணவர்களிடம் கலந்துரையாடினர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி