விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே தண்டியனேந்தல் கிராமத்தில் கல்குவாரி அமைக்கப்படக் கூடாது என அந்த பகுதியைச் சார்ந்த பொதுமக்கள் தமிழக நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவிற்கு வீடியோ ஒன்றை வெளியிட்டு கோரிக்கை விடுத்தனர் இதை அறிந்த அமைச்சர் தங்கம் தென்னரசு காரியாபட்டி மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் கண்ணன் கல்குறிச்சி ராஜேந்திரன் தண்டியனேந்தல் கிராமத்திற்கு நேரில் சென்று ஊர் பொதுமக்களை சந்தித்து குவாரி கண்டிப்பாக அமைக்கப்படாத என்று அமைச்சர் உறுதி அளித்து இருப்பதாகவும் கிராம மக்களிடம் தெரிவித்தனர்