விருதுநகர் மாவட்டத்தில் சீர்மரபினர் நலவாரியத்தில் உறுப்பினர் சேர்க்கைக்கான சிறப்பு முகாமானது மூன்றாவது கட்டமாக, ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்றத் தொகுதியில் 19. 04. 2025 அன்று காலை 10. 00 மணி முதல் மாலை 5. 00 மணி வரை கீழ்க்கண்ட இடங்களில் நடைபெற இருக்கிறது.
மேலும், ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் உச்சிமாகாளி உற்சவ மண்டபம், மேட்டுத்தெரு, ஸ்ரீவில்லிபுத்தூரிலும், அய்யம்பட்டி, மறவர் சமுதாயக்கூடம், PRC டிப்போ பின்புறத்திலும், TELC தொடக்கப்பள்ளி, ஆயர் தர்மம், வத்திராயிருப்பு ஆகிய இடங்களில் நடைபெற உள்ளது.
கல்வியில், பொருளாதாரத்தில் மேம்பாடு அடைவதற்கான முயற்சியில் பங்கேற்று இவ்வாய்ப்பினை பயன்படுத்தி சீர்மரபினர் சமுதாய மக்கள் உறுப்பினர்களாக சேர்ந்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.