காரியாபட்டி அருகே கோவில் உண்டியலில் இருந்த பணத்தை திருடி சென்ற நபரை விரட்டிப் பிடித்த நபர் காவல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டது
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி கே செவல்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கலைச்செல்வன் இவர் மெக்கானிக் வேலை செய்து வருவதாகவும் இவர்களுக்குச் சொந்தமான கபால காளியம்மன் கோவில் சிலை அருகே உள்ள அன்னதான கூடத்தில் இருந்த உண்டியலில் தினேஷ் என்பவர் பணத்தை திருடிவிட்டு ஓடியது தெரியவந்தது
அவரை விரட்டிப் பிடித்தவர் அவரிடம் இருந்த 550 ரூபாய் ரொக்கப் பணத்தை மற்றும் அவர் ஓட்டிச் சென்ற இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து காரியாபட்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார் மேலும் இது குறித்து அவர் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்