தாய்நாட்டிற்காக தங்களது இளம் வயதை இராணுவப் பணியில் கழித்து பணிக்காலம் நிறைவு பெற்ற, ஓய்வு பெற்ற முன்னாள் படைவீரர்களது பாதுகாப்பை உறுதி செய்திடவும், வாழ்வாதாரத்தை மேம்படுத்திடவும், ‘முதல்வரின் காக்கும் கரங்கள்” என்ற புதிய திட்டம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இத்;திட்டத்தில் முன்னாள் படைவீரர்கள், முன்னாள் படைவீரர்களின் மறுமணம் ஆகாத கைம்பெண்கள், படைப்பணியின் போது இறந்த படைவீரர்களின் கைம்பெண்கள், முன்னாள் படைவீரரின் திருமணமாகாத மகள் ஃ விதவை மகள்கள் ஆகியோர் தகுதியானவர்கள்.
இத்திட்டத்தின் மூலம் தொடங்கப்படும் தொழில்களுக்கு வழங்கப்படும் கடன் தொகையில் 30 விழுக்காடு மூலதன மானியமும், 3 விழுக்காடு வட்டிமானியமும் வழங்கப்படும். மேலும் திறன் மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சிகளும் அரசால் வழங்கப்படும். இத்திட்டத்தின் மூலம் அதிகபட்சமாக ஒரு கோடி ரூபாய் வரை கடன் பெறலாம்.