விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி பேரூராட்சியில் பணிபுரியும் மேல்நிலை நீர் தேக்க தொட்டி ஆப்ரேட்டர்களுக்கான குடிநீர் மூலம் பரவும் நோய்கள் தடுப்பு பற்றிய விளக்கக் கூட்டம் இன்று 10. 07. 2024 பேரூராட்சி அலுவலக கூட்ட அரங்கில் பேரூராட்சி தலைவர் ஆர். கே செந்தில் தலைமையில் நடைபெற்றது. இதில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சீதாராமன் முன்னிலை வகித்தார். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் பொதுமக்களுக்கு குளோரை நேசன் செய்து பாதுகாப்பான குடிநீர் வழங்குதல் மாசு கலந்த நீரின் மூலம் வயிற்றுப்போக்கு காய்ச்சல் வாந்தி பேதி காலரா மற்றும் டைபாய்டு நோய்கள் பரவுவதை எவ்வாறு தடுப்பது குறித்து விளக்கப்பட்டது மேலும் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகள் குறித்தும் அறிவுறுத்தப்பட்டது.