விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி முக்குரோட்டில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் இன்று ஆடி மாத 3-வது வெள்ளிக்கிழமை முன்னிட்டு மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். காலை முதல் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு மாரியம்மனை தரிசனம் செய்து வந்தனர். பின்னர் கோயில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.