ரப்பர் கழிவில் தீ விபத்து

63பார்த்தது
காரியாபட்டியில் ரப்பர் கழிவில் தீ விபத்து - புகை மண்டலத்தினால் ஒரு சிலருக்கு மூச்சு திணறல் - விரைந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்த தீயணைப்புத் துறையினர்.



விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி பெரிய பள்ளிவாசல் பின்புறம் பாழடைந்த கிணற்றில் ரப்பர் கழிவுகளை கொட்டி மர்ம நபர்கள் தீவைத்து எரித்து விட்டு சென்றுள்ளனர்.

இதனால் தீ மள, மள வென பரவி காரியாபட்டி பகுதி முழுவதும் புகைமண்டலமாக காட்சியளித்தது. இந்த புகை மண்டலத்தால் ஒரு சிலருக்கு மூச்சுத் திணறலும் ஏற்பட்டது.

உடனே தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காரியாபட்டி தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையினர் பாழடைந்த கிணற்றில் கொழுந்துவிட்டு எரிந்த தீயை ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராடி அனைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

சுமார் 3 மணி நேரத்திற்கு பிறகு புகை மண்டலம் படிப்படியாக குறைய தொடங்கியது.

இந்த தீ விபத்து சம்பவம் குறித்து காரியாபட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி