பெரியாரின் திருவுருவ சிலையினை நிதியமைச்சர் திறந்து வைத்தார்

81பார்த்தது
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கல்குறிச்சியில் பெரியார் நினைவு சமத்துவபுரம் கட்டப்பட்டுள்ளது. இதில் இன்று தந்தை பெரியாரின் திருவுருவ சிலையினை தமிழ்நாடு நிதி சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் ராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி ஆகியோர் திறந்து வைத்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

அதனைத் தொடர்ந்து அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் கல்குறிச்சி சமத்துவபுரம் வளாகத்தில் 9. 45 லட்சம் செலவிட்டில் கட்டப்பட்ட புதிய நியாய விலை கடையினையும் ராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனியுடன் சேர்ந்து தமிழ்நாடு நிதி அமைச்சர் தங்கம்தென்னரசு பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்து பொதுமக்களுக்கு ரேசன் பொருட்களை வழங்கினார்.
தந்தை பெரியார் சிலை திறக்க வருகை தந்த அமைச்சர் மற்றும் எம். பிக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அதனைத் தொடர்ந்து கல்குறிச்சியில் புதிதாக கட்டப்பட்ட சமுதாய கூடகட்டிடம், செல்லையாபுரத்தில் புதியதாக கட்டப்பட்ட நியாய விலை கடை கட்டிடம், அன்னலட்சுமி புரத்தில் புதிதாக கட்டப்பட்ட கலையரங்க கட்டிடத்தினையும் அமைச்சர் தங்கம் தென்னரசு பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி