விவசாயப் பணிகளை தீவிர படுத்திய விவசாயிகள்

68பார்த்தது
விவசாயப் பணிகளை தீவிர படுத்திய விவசாயிகள்
அருப்புக்கோட்டை புளியம்பட்டி, பாளையம்பட்டி, கோபாலபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் மானா வாரியாக விவசாயம் நடைபெற்று வருகிறது. இப்பகுதிகளில் பருத்தி, கம்பு, சோளம், சூரியகாந்தி உள்ளிட்ட பயிர்கள் பயிரிடப்படுகிறது. தற்போது ஆடி மாதம் நெருங்கி வரும் நிலையில் பயிர்கள் பயிரிடுவதற்காக விவசாயிகள் தங்கள் நிலத்தை முன்கூட்டியே தயார் செய்து வருகின்றனர். ஆடிப்பட்டத்தில் விதைப்பதற்காக விவசாயிகள் நிலத்தை உழுது சமன் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து விவசாயிகள் கூறுகையில், இந்த வருடம் நல்ல மழை பொழியும் என எதிர்பார்க்கிறோம். ஆடி மாதத்தில் விதை விதைப்பதற்காக தற்போதைய டிராக்டர்கள் மூலம் நிலத்தை உழுது தயார் செய்து வருகிறோம். ‌ இந்த ஆண்டு நல்ல மகசூல் கிடைக்கும் என நம்பிக்கையுடன் விவசாய பணிகளை துவங்கி உள்ளோம் எனக் கூறினர்.

தொடர்புடைய செய்தி