போதை ஒழிப்பு, பெண்களுக்கு எதிரான குற்றம், சைபர் குற்றம் தொடர்பாக விழப்புணர்வு முகாம்
விருதுநகர் மாவட்டம், திருச்சுழி உட்கோட்டம், ம. ரெட்டியபட்டி காவல் நிலைய சரகம், ம. ரெட்டியபட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் இன்று 09. 10. 2023ம் தேதி பள்ளி மாணவ, மாணவியர்களிடையே விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது. மேற்படி நிகழ்ச்சியில் விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ரா. ஸ்ரீனிவாச பெருமாள், M. A, M. B. A. , அவர்கள் கலந்து கொண்டு பள்ளி மாணவ, மாணவியர்களிடம் போதை பொருள் பழக்கம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சைபர் கிரைம் மற்றும் POCSO வழக்குகளில் நடவடிக்கைகள் மற்றும் தண்டனைகளின் விபரங்கள் குறித்தும், மேலும் பள்ளி மாணவ, மாணவியர்களிடையே சாதிய பாகுபாடின்றி பழக வேண்டும் என்றும் கலந்துரையாடி விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார். பின்பு மாணவ, மாணவியர்களுடன் சேர்ந்து மதிய உணவு உட்கொண்டார். மேற்படி நிகழ்ச்சியில் 200 பள்ளி மாணவ, மாணவியர்களும், தலைமையாசிரியர், ஆசிரியர்கள், திருச்சுழி உட்கோட்ட துணைக்காவல் கண்காணிப்பாளர் திரு. ஜெகந்நாதன், அருப்புக்கோட்டை வருவாய் வட்டாட்சியர், திரு. அறிவழன் மற்றும் திரு. அழகு சுந்தரம், சமூக ஆர்வலர் ஆகியோர்கள் கலந்து கொண்டார்கள்.