விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே எஸ். கல்விமடை கிராமத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று கருப்பண்ணசாமி கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த கும்பாபிஷேக விழாவில் எஸ். கல்விமடை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் உணவருந்தினர்.
அந்த கும்பாபிஷேக விழாவில் உணவருந்திய பலருக்கு திடீரென உடல் உபாதைகள் ஏற்பட்டது. எஸ். கல்விமடை கிராமத்தைச் சேர்ந்த சிறியவர்கள், குழந்தைகள், பெரியவர்கள் வரை சுமார் 30க்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவமனை மற்றும் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். எஸ். கல்விமடை கிராமத்தில் சுகாதாரத் துறையினர் முகாமிட்டு அங்குப் பொதுமக்களுக்கு மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொண்டனர்.
இந்நிலையில் தற்போது மீண்டும் அந்தக் கிராமத்தில் 100க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி வயிற்றுப்போக்கு ஏற்பட்டு மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எஸ். கல்விமடை கிராமத்திலிருந்து ஆம்புலன்ஸ்கள் மூலம் அவர்கள் மதுரை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
கும்பாபிஷேக விழாவில் மதியம் ஒரு மணிக்கு மேல் உணவு அருந்திய அவர்களுக்கு மட்டுமே உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. இந்தக் கும்பாபிஷேக விழாவில் பயன்படுத்திய தண்ணீரினால் தான் உடல் உபாதைகள் ஏற்பட்டிருக்கலாம் என மருத்துவ அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அதிர்ச்சியடைய வைத்துள்ளது.