விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே ஆவியூர் கிராமத்தில் சுமார் 5, 000-க்கு மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் தற்போது 100 நாள் வேலை திட்ட பணிகள் சுழற்சி முறையில் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த 100 நாள் வேலைத்திட்டத்தில் பணி செய்வதற்காக பணியாளர்களிடம் நபர் ஒன்றுக்கு ரூபாய் 200 வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
இது குறித்து ஆவியூர் கிராமத்தில் நூறு நாள் பணியாளர்கள் கூறுகையில்,
நூறு நாள் வேலைத் திட்டத்தில் வேலை செய்யும் பணியாளர்களிடம் ரூபாய் 200 வசூலிக்கின்றனர். 200 ரூபாய் கொடுத்தால் தான் வேலை செய்வதற்காக அட்டை போடப்படும் எனவும் கூறுகின்றனர் இல்லை என்றால் வேலை கிடையாது என சொல்லி விடுகிறார்கள். எதற்காக இந்த 200 ரூபாய் வசூலிக்கப்படுகிறது என கேட்டால் 100 நாள் வேலை திட்ட பணியை ஜேசிபி மூலம் செய்வதற்காக பணம் வசூலிக்கப்படுவதாக கூறுகின்றனர். ஆனால் அது போன்று எதுவும் நடந்ததாக தெரியவில்லை. ரூ 200 வாங்கி கொண்டு 5 நாட்கள் மட்டுமே பணி வழங்குகின்றனர். பணம் கொடுக்காதவர்களுக்கு பணி இல்லை எனக் கூறிவிடுவார்கள். ஊராட்சி கிளர்க் தான் இந்த வேலையை செய்கிறார் என கூறினர்.