பூத் கமிட்டி பொறுப்பாளர் தலைமையில் பூத் கமிட்டி கள ஆய்வு

67பார்த்தது
அஇஅதிமுக கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி யார் அவர்களின் ஆணைக்கிணங்க, விருதுநகர் கிழக்கு மாவட்ட கழகச் செயலாளர் ஆர். கே. ரவிச்சந்திரன் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், பூத் கமிட்டி பொறுப்பாளருமான மைக்கேல் ராயப்பன் தலைமையில் அதிமுக பூத் கமிட்டி கள ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர் முத்துராமலிங்கம் ஏற்பாட்டில், திருச்சுழி தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பரளச்சி மற்றும் பூலாங்கால் பகுதிகளில் அதிமுக பூத் கமிட்டிக்கு நியமனம் செய்யப்பட்டுள்ள நிர்வாகிகளை விருதுநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர்ச் ஆர். கே. ரவிச்சந்திரன் மற்றும் பூத் கமிட்டி பொறுப்பாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மைக்கேல் ராயப்பன் ஆகியோர் நேரில் சந்தித்து கள ஆய்வு மேற்கொண்டனர். அதிமுக பூத் கமிட்டிக்கு தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகளின் பணிகள் குறித்து பூத் கமிட்டி பொறுப்பாளர் மைக்கேல் ராயப்பன் விரிவாக எடுத்துரைத்தார். திருச்சுழி தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட அதிமுக கிளைகளில் பூத் கமிட்டி நிர்வாகிகள் நியமனம் செய்தது தொடர்பான விண்ணப்பப் படிவங்களை பூத் கமிட்டி பொறுப்பாளர் மைக்கேல் ராயப்பன் மற்றும் மாவட்ட கழகச் செயலாளர் ஆர். கே. ரவிச்சந்திரன் ஆகியோர் கள ஆய்வு செய்தனர்.


மாவட்ட கழக நிர்வாகிகள், திருச்சுழி தெற்கு ஒன்றிய அதிமுக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி