வீர காளியம்மன் கோவிலில் இருந்த உண்டியல் திருட்டு காவல்துறை வழக்கு பதிவு
விருதுநகர் மாவட்டம் புரசலூர் மேலத்தெருவை சார்ந்தவர் முத்துராமலிங்கம் வயது 55 இவர் புரசலூர் கிராமத்தில் இருந்து முஷ்டக்குறிச்சி செல்லும் சாலையில் உள்ள வீரகாளியம்மன் கோவிலில் உண்டியல் திருடு போய் இருப்பதாகவும் அதே பகுதியைச் சார்ந்த சங்கரேஸ்வரன் என்பவர் இரவு நேரத்தில் கோவில் பக்கம் சுற்றி திரிந்ததாகவும் அவர் மீது சந்தேகத்தின் அடிப்படையில் புகார் அளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் சங்கரேஸ்வரன் மீது வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறையினர் உண்டியலில் இருந்த சுமார் 2500 ரூபாய் பணத்தை அவர் செய்து இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை செய்து வருகின்றனர்