விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே மல்லாயிணறு பேரூராட்சி பகுதிகளில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் பற்றிய விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்த வேண்டி இன்று ஞாயிற்றுக்கிழமை 08. 10. 2023-ம் தேதி காலை 8. 00 மணியளவில் விழிப்புணர்வு நடைபயணத்தை மல்லாங்கிணறு பேரூராட்சி சேர்மன் திரு. துளசிதாஸ் தொடங்கி வைத்தார். இந்த விழிப்புணர்வு நடைப்பயணத்தில் பேரூராட்சி வைஸ் சேர்மன் மிக்கேலம்மாள், பேரூராட்சி கவுன்சிலர்கள் , பேரூராட்சி அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள்.