விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி கே. செவல்பட்டி அழகர்சாமி நகரில் குடியிருந்து வரும் சுப்புராஜ். இவர் எலக்ட்ரீஷனாக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ஆண்டாள் தேவி திருச்சுழி நெடுஞ்சாலைத்துறையில் பணிபுரிந்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று காலை 9 மணி அளவில் சுப்புராஜ் மற்றும் அவரது மனைவி, மகன் பரத்ராம் ஆகிய 3 பேரும் வீட்டை பூட்டி விட்டு வீட்டின் சாவியை வெளியே வைத்து சென்று விட்டனர். பீரோ உடைக்கப்பட்டு இருந்துள்ளது உடனே பரத்ராம் பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளார். பீரோலில் வைத்திருந்த 30 பவுன் தங்க நகை காணாமல் போயிருந்தது தெரியவந்தது. சுப்புராஜ் காரியாபட்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தார். தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த காரியாபட்டி போலீசார் மற்றும் மோப்பநாய் மற்றும் தடயவியல் நிபுணர்கள் உதவியுடன் தீவிரமாக சோதனை செய்து வந்தனர். சம்பவம் நடைபெற்ற இடத்தில் அருப்புக்கோட்டை ஏ. எஸ். பி மதிவாணன் நேரில் ஆய்வு செய்தார்.