அருப்புக்கோட்டை நெசவாளர் காலணியில் நூலகத்துடன் கூடிய அறிவுசார் மையம் அமைந்துள்ளது. கணினி வசதியுடன் கூடிய இந்த அறிவுசார் மையத்தில் ஏராளமான போட்டித் தேர்வுகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த அறிவுசார் மையத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அறிவுசார் மையத்தில் அமர்ந்து, அங்கு படிக்கும் போட்டித் தேர்வர்களிடம் அறிவுசார் மையத்தில் தேவையான வசதிகள் உள்ளதா வேறு ஏதேனும் தேவைகள் உள்ளதா? என அமைச்சர் கேட்டிறிந்தார். அப்போது தங்களது போட்டி தேர்வுகளுக்கு படிப்பதற்காக 6 ம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையான புத்தகங்கள் தேவைப்படுவதாக போட்டி தேர்வுகள் அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தனர். பொது உடனடியாக அங்கிருந்தபடியே மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்ட அமைச்சர் அறிவுசார் மையத்திற்கு போட்டி தேர்வுகள் படிப்பதற்காக புத்தகங்கள் தேவை எனவும் உடனடியாக அதை வழங்க நடவடிக்கை எடுக்கவும் கேட்டுக் கொண்டார். மேலும் உங்களுக்கு வேற என்ன புத்தகங்கள் தேவையோ அதை என்னிடம் எழுதிக் கொடுங்கள் நான் அனைத்து புத்தகங்களையும் உடனடியாக கிடைக்க நடவடிக்கை மேற்கொள்கிறேன் என உறுதி அளித்தார். உடனடியாக புத்தகங்கள் கிடைக்க ஏற்பாடு செய்த அமைச்சருக்கு போட்டி தேர்வர்கள் நன்றி தெரிவித்தனர்.