கால்நடை கணக்கெடுப்பு பணியினை ஆட்சியர் தொடங்கி வைத்தார்

69பார்த்தது
விருதுநகர் நகராட்சி 30-வது வார்டில், கால்நடை பராமரிப்புத் துறையின் சார்பில், 21-வது கால்நடை கணக்கெடுப்பு பணியினை இன்று மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ. ப. ஜெயசீலன், இ. ஆ. ப. , அவர்கள் துவக்கி வைத்தார்.

பின்னர், 21-வது கால்நடை கணக்கெடுப்பு -2024 அறிவுரைக் கையேட்டினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ. ப. ஜெயசீலன், இ. ஆ. ப. , அவர்கள் தொடர்புடைய அலுவலர்களுக்கு வழங்கினார்.

இந்த கணக்கெடுப்பில் கால்நடை வளர்ப்போரின் பெயர், முகவரி, ஆதார் எண், அலைபேசி எண் அவர்களிடம் உள்ள நில அளவு, முக்கிய தொழில், கல்வித் தகுதி, கால்நடைகளின் எண்ணிக்கை, இனம், வயது, பாலினம் அதன் பயன்பாடு குறித்த தகவல்கள் சேகரிக்கப்படும்.

மேலும், விருதுநகர் மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் கணக்கெடுப்பு விரைவாக நடத்தபடவுள்ளதால், உங்கள் வீடு தேடி வரும் கால்நடை மற்றும் புள்ளி விவர அலுவலர்களிடம் தக்க ஒத்துழைப்பு அளித்து கால்நடைகள் குறித்த உரிய விவரங்களையும் வழங்க வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ. ப. ஜெயசீலன், இ. ஆ. ப. , அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்நிகழ்வில், கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் மரு. தியோ பிளஸ் ரோஜா, உதவி இயக்குநர் மரு. வெங்கடேஷ் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் இருந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி