சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை. ஸ்ரீவில்லிபுத்துார் விரைவு மகிளா நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு.
விருதுநகர் மாவட்டம்,
அருப்புக்கோட்டை தாலுகா,
ஆத்திப்பட்டி கிராமத்தில் வசிக்கும் ரமேஷ் என்பவரின் மகன் சுரேஷ்குமார் (31), இவர் அதே பகுதியில் வசிக்கும் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தாக, பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் கடந்த 05. 04. 2022 தேதி அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து ஸ்ரீவில்லிபுத்தூர் விரைவு மகிளா நீதிமன்றத்தில் வழக்கு நடைப்பெற்று வந்த நிலையில் சுரேஷ்குமார் என்பவரை குற்றவாளி என நேற்று ஜன. 9 அறிவித்த நீதிமன்ற நீதிபதி பகவதியம்மாள், மேற்படி குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும்,
ரூ 30 ஆயிரம் அபராதம் விதித்து பரபரப்பு தீர்ப்பு வழங்கி உத்தரவு பிறப்பித்து உள்ளார்.