ஸ்ரீவில்லிபுத்துார்: கஞ்சா விற்பனை செய்த இளைஞர் கைது...

53பார்த்தது
ஸ்ரீவில்லிபுத்துார் அருகே கஞ்சா விற்பனை செய்த இளைஞர் கைது. 55கிராம் கஞ்சா மற்றும் ரொக்க பணம் பறிமுதல்.
விருதுநகர் மாவட்டம்,
ஸ்ரீவில்லிபுத்துார் அடுத்த வத்திராயிருப்பு பகுதியில் இயங்கி வரும் பள்ளி அருகே உள்ள காசி விஸ்வநாதர் ஆலயம் முன்பாக வைத்து இளைஞர் கஞ்சா விற்பனை செய்து வருவதாக வத்திராயிருப்பு போலீஸாருக்கு தகவல் வந்தன. மேற்படி தகவலின் பேரில் சார்பு ஆய்வாளர் ரமேஷ்குமார் தலைமையில் போலீஸார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினர். இந்த ஆய்வில் வத்திராயிருப்பு நொண்டியம்மன் கோவில் தெற்கு தெருவை சேர்ந்த 23வயதுடைய இளைஞர் நல்லதம்பி என்பவர் கஞ்சா விற்பனை செய்து வந்தது தெரிய வந்தன. மேலும் அவரிடமிருந்து 55 கிராம் கஞ்சா மற்றும் ரொக்க பணம் ரூ 350 /- பறிமுதல் செய்த போலீஸார் அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி