விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள கொத்தங்குளம் பேருந்து நிறுத்தம் முன்பாக கஞ்சா விற்பனை செய்வதாக வன்னியர்பட்டி காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் வந்தது. மேலும் பெயரில் சார்பு ஆய்வாளர் கனகராஜ் தலைமையில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். இதில் வைத்திலிங்கபுரத்தை சேர்ந்த மாயக்கண்ணன் (34) என்பவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது. மேலும் அவரிடமிருந்து கஞ்சா பறிமுதல் செய்து வன்னியர்பட்டி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.