ஸ்ரீவில்லிபுத்தூர்: ஆண்டாள் கோவில் சொர்க்கவாசல் திறப்பு...

71பார்த்தது
ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்.
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் சொர்க்கவாசல் எனப்படும் பரமபதவாசல் திறப்பு நடைபெற்றது. கோதை பிறந்த ஊர் கோவிந்தன் வாழும் ஊர் என்று பெயர் பெற்றது ஸ்ரீவில்லிபுத்தூர். கோதையாகிய ஸ்ரீஆண்டாள் பிறந்த ஊராகிய இங்கு ஆடிப்பூரம் தேரோட்டம் மிகமுக்கியமான நிகழ்ச்சியாகும் அதற்கு அடுத்தபடியாக மார்கழி மாத திருவிழாவாகிய பகல் பத்து மற்றும் இராப்பத்து என்ற நிகழ்சிகள் வருடந்தோறும் சிறப்பாக நடைபெறும். 108 திவ்ய தேசங்களில் ஒன்றான ஸ்ரீஆண்டாள் பிறந்த ஊருமாகிய ஸ்ரீவில்லிபுத்தூரில் பகல்பத்து முடித்து இராப்பத்து ஆரம்பிக்கும் நாளான இன்று வைகுண்டஏகாதசி என்று அழைக்கப்படும். இந்நாளில் திருக்கோவிலில் அமைந்திருக்கும் பரமபதவாசல் எனப்படும் சொர்க்கவாசல் வருடம் ஒருமுறை மட்டுமே இந்த பரமபதவாசல்திறக்கப்படுவதால் பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது ஜன10 காலை திறக்கப்பட்ட இந்த பரமபதவாசல் வழியாக பெரியபெருமாளும் ,
ஸ்ரீஆண்டாள் ஸ்ரீ ரெங்கமன்னார் உள்ளிட்டவர்களும் வெளியில் வருவர் அதன் பின்னர் பக்தர்கள் கூட்டம் வெளியேறுவர். இன்று திறக்கப்படும் இந்த பரமபதவாசல் வழியாக வருபவர்கள் வைகுண்டத்திற்க்கு சென்று வருவதாக ஜதீகம், எனவே உள்ளுர் பக்தர்கள் மட்டுமின்றி வெளியூர் பக்தர்கள் ஆயிரக்கணக்கானோர் இந்த வைபவத்தில் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி