ஸ்ரீவில்லிபுத்தூர்: ஆண்டாள் கோயில் பகல்பத்து உற்ஸவம் வவக்கம்.

55பார்த்தது
ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் டிச. 31 பகல் பத்து உற்ஸவம் துவக்கம்.
விருதுநகர் மாவட்டம்,
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண் டாள் கோயிலில் டிச. 31 பகல் பத்து உற்ஸவம் துவங்குகிறது. முக்கிய நிகழ்வான சொர்க்க வாசல் திறப்பு வரும் ஜன 10 நடக்கிறது. மேலும் அன்று முதல் ராப்பத்து உற்ஸவ துவக்கமும், ஜன 7 முதல் 14 வரை மார்கழி எண்ணெய் காப்பு உற்ஸவமும் நடக் கிறது. ஆண்டாள் கோயிலில் டிச. 31 முதல் ஜன9 வரை பகல் பத்து உற்ஸவம் நடக்கிறது. இதனை முன்னிட்டு டிச 31 மாலை 4: 00 மணிக்கு வேதபிரான் திருமாளிகைக்கு
ஆண்டாள், ரெங்கமன்னார் எழுந்தருளி பச்சை பரத் தலை பார்க்கும் உற்ஸவம் நடக்கிறது.
மேலும் தொடர்ந்து காலை ஆண்டாள், ரெங்கமன்னார் மண்டபம் எழுந்தருளல், அரையர் சேவை, திருவாராதனம், கோஷ்டி, பெரிய பெருமாள் பக்தி உலா நிகழ்ச்சிகள் நடக்கிறது. முக்கிய நிகழ்வான வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு வரும் ஜன 10 காலை 7: 05 மணிக்கு நடக்கிறது. அப்போது பெரியபெருமாள், ஆண்டாள்,
ரெங்கமன்னார் சொர்க்கவாசல் வழியாக எழுந்தருள ஆழ்வார்கள் எதிர்கொண்டு சேவித்து வரவேற்று, மாட வீதிகள் வழியாக ராப்பத்து மண்டபம் வந்தடைவர். அங்கு ஆழ்வார்கள் மங்களாசாசனம், பக்தி உலாவுதல், திருவாராதனம், அரையர் சேவை, சேவா காலம் நடக்கிறது.
2025 ஜன. , 10 முதல் 20 வரை ராப்பத்து உற்ஸ வம் நடக்கிறது.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி