ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே காவல் நிலையத்தில் புகுந்த கருநாகம். உயிரோடு மீட்ட தீயணைப்பு வீரர்கள்.
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரை அடுத்த வத்திராயிருப்பு அருகே உள்ள கூமாபட்டி காவல் நிலையத்திற்குள் புகுந்த
கொடிய விஷமுடைய கருநாகத்தை தீயணைப்புத் துறையினர் உயிரோடு மீட்டு வனப்பகுதியில் விட்டனர்.
பிளவக்கல் அணைக்கு செல்லும் ரோட்டில்
கூமாபட்டி காவல் நிலையம் உள்ளது. இதனை சுற்றி ஏராளமான வயல் நிலங்கள் இருக்கிறது. இந்நிலையில் ஜூன் 8 நேற்று இரவு11: 30 மணிக்கு மேல் 4 அடி நீள கொடிய விஷமுடைய கருநாகம் ஒன்று போலீஸ் ஸ்டேஷனுக்குள் புகுந்தது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார், வத்திராயிருப்பு
தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்புத் துறையினர், போலீஸ் ஸ்டேஷனில் புகுந்த கருநாகத்தை பிடித்து வனப்பகுதியில் உயிரோடு பத்திரமாக விட்டனர்.