ஸ்ரீவில்லிபுத்துார் அருகே பள்ளி முன்பாக கஞ்சா விற்பனை செய்த இரண்டு இளைஞர்கள் கைது. கஞ்சா மற்றும் ரொக்கப் பணம் பறிமுதல்.
விருதுநகர் மாவட்டம்,
ஸ்ரீவில்லிபுத்துார் அருகே மம்சாபுரம் கிராம பகுதியில் இயங்கி வரும் பள்ளி முன்பாக சட்டவிரோதமாக இருசக்கர வாகனத்தில் வைத்து கஞ்சா விற்பனை நடைபெறுவதாக நகர் காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் வந்தன. மேற்படி தகவலின் பேரில் சார்பு ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேப்படி இருசக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்த நபர்களை பிடித்து விசாரணை செய்தனர். மேலும் விசாரணையில் அவர்கள் ஸ்ரீவில்லிபுத்துார் பகுதியை சேர்ந்த சரவணன் மற்றும் முனீஸ்வரன் என்பது தெரிய வந்தன. மேலும் இருசக்கர வாகனத்தில் மறைத்து வைத்திருந்த கஞ்சாவையும், இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்த போலீஸார் இருவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.