ஸ்ரீவில்லிபுத்துார்: லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட நபர் கைது..

56பார்த்தது
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கம்மாபட்டியிலுள்ள காமராஜர் சிலை முன்பாக தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்தாக நகர் காவல் நிலையத்துக்கு தகவல் வந்தது. மேலும் தகவலின் பேரில் சார்பு ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் போலீஸார் ரோந்து பணி செய்யும் போது கம்மாபட்டி மேற்கு தெருவை சேர்ந்த பெரியசாமி என்பவர் மறைமுகமாக லாட்டரி விற்பனை செய்வது தெரிய வந்தது. மேலும் அவரிடமிருந்து லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்த போலீஸார் பெரியசாமி மீது நகர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி