விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்துார் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான உலக பிரசித்தி பெற்ற ஆண்டாள் திருகோவிலில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னாள் நவராத்திரி திருவிழா கோலாகலமாக தொடங்கியது. நவராாத்திரி திருவிழாவை முன்னிட்டு கொலு மண்டபத்தில் அன்னை ஆண்டாள் இடது கையில் பச்சை பொற்கிளியுடன் 3 நாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
மேலும் நவராத்திரி திருவிழா 10 நாட்கள் நடைபெற உள்ள நிலையில் ஆண்டாள் கோவில் சன்னி தானத்திலுள்ள கொலு மண்டபத்தில் தினமும் ஒரு சிறப்பு அலங்காரத்தில் அன்னை ஆண்டாள் பக்தர்களுக்கு காட்சியளிப்பார். மேலும் இந்த அல்ங்காரத்தை காண ஸ்ரீவில்லிபுத்துார் மற்றும் சுற்று பகுதியை ஏராளமானோர் நவராத்திரி விழாவில் கலந்து அன்னை ஆண்டாளை தரிசனம் செய்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் சார்பாக செய்திருந்தனர்.