ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கூமாபட்டி பகுதியில் வாலிபர் வெட்டி படுகொலை. உடலை கைப்பற்றி காவல்துறையினர் விசாரணை.
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள வத்திராயிருப்பு கூமாபட்டி சர்ச் தெருவை சேர்ந்தவர் முத்துக்குமார் 26 வயது,
இவருக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளது.
இந்த நிலையில் டாட்டா ஏசி வாகன ஓட்டுனரான முத்துக்குமார் ஊரணி தெரு பகுதியில் உள்ள தனியார் தோப்பில் வைத்து நேற்று மாலை சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு மர்ம நபர்கள் தப்பியோடி உள்ளனர். தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வத்திராயிருப்பு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை செய்யப்பட்ட இடத்தின் அருகே மது பாட்டில்கள் இருந்ததால் மது அருந்தும் போது மோதல் ஏற்பட்டதா அல்லது முன் பகையின் காரணமாக இந்த கொலை நடைபெற்றதா என்பது குறித்து கூமாபட்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தலைமறைவான குற்றவாளிகளை போலீஸார் தேடி வருகின்றனர்.