ஸ்ரீவி: மோதலில்வெடிகுண்டுகள் வீச்சா? போலீஸ் விசாரணை....

80பார்த்தது
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இருதரப்பினர் மோதலில் வெடிகுண்டுகள் வீச்சா?
4 நாட்டு வெடிகுண்டுகள் சிக்கின.
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரை அடுத்த மம்சாபுரம் அருகே ஆட்டுப்பண்ணையில் வசிப்பவர் சூர்யா (வயது 40) ஆடு மேய்த்து வருகிறார். இவர் பாண்டி என்பவரிடம் கடன் வாங்கியதாக தெரிகிறது. இந்நிலையில் பாண்டி, மம்சாபுரம் பகுதியை சேர்ந்த சங்கிலி, அவரது மகன் பெரியசாமி ஆகிய 3 பேரும் பணத்தை கேட்க சென்ற போது ஏற்பட்ட மோதலில் சூர்யாவை அவர்கள் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதில் காயமடைந்த சூர்யாவை ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்து சூர்யா மம்சாபுரம் போலீசில் புகார் அளித்தார். அதே போல சங்கிலி தரப்பினர் கொடுத்த புகாரில் பணத்தை வசூலிக்க தாங்கள் சென்றபோது மோதல் ஏற்பட்டுவெடிகுண்டுகள் வீசப்பட்டதாக கூறினர். இதைத் தொடர்ந்து விருதுநகர் மாவட்ட வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் ஆட்டுப்பண்ணையில்
சோதனையில்வெடிகுண்டுகளை கைப்பற்றினர். ஸ்ரீவில்லிபுத்தூர் இன்ஸ்பெக்டர் முத்துக்குமாரி தலைமையில் போலீசார், வேறு எங்கும் வெடிகுண்டு பதுக்கி வைக்கப்பட்டு உள்ளதா? என விசாரணை நடத்தினர். இச்சம்பவம் தொடர்பாக சூர்யா மற்றும் இவருடைய மனைவி சரசு, பாண்டி, சங்கிலி, பெரியசாமி வெடிகுண்டு கொடுத்ததாக மம்சாபுரத்தை சேர்ந்த ஜெயக்குமார், முனியசாமிஆகிய 7 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி