ஸ்ரீவி: கிராம மக்கள் போராட்டம்...

3பார்த்தது
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரை அடுத்த வத்திராயிருப்பு அருகே நல்லதங்காள் கோயில் சிலை உடைக்கப்பட்ட நிலையில் புதிய சிலை வைத்து கும்பாபிஷேகம் நடத்த இந்து சமய அறநிலைத்துறை அனுமதி தர கோரி கிராம மக்கள்
300க்கு மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வத்திராயிருப்பு அருகே  அர்ச்சுனாபுரத்தில் அமைந்துள்ளது நல்லதங்காள் கோயில்.    தமிழக பெண்களின் கலாச்சாரத்திற்கும்,   அண்ணன், தங்கை உறவிற்கும் மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கிய கோவிலாகும்.
இக்கோவிலுக்கு தமிழகம் முழுவதிலும் இருந்தும் குழந்தை வரம் வேண்டி ஏராளமானோர் வந்து நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டு வருகின்றனர்.
மேலும் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலில் கடந்த 2025 ஜனவரி 26 ஆம் தேதி   கோயில் கருவறையின் கதவுகள் உடைக்கப்பட்டு நல்லதங்காள் சிலை சுக்கு நூறாக உடைத்து நொறுக்கப்பட்டு கிடந்ததை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த சம்பவத்தில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில் அர்ச்சனாபுரம் கிராம மக்கள் சார்பாக செய்யப்பட்டுள்ள நல்லதங்காள் சிலையை கோயிலில் வைக்க அனுமதி வழங்காத இந்து சமய அறநிலையத்துறை கண்டித்து வத்திராயிருப்பு முத்தாலம்மன் பஜார் பகுதியில் ஊர் பொதுமக்கள் மற்றும் அனைத்து கட்சி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி