ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் செயல் அலுவலரை கண்டித்து கிராம மக்கள் முற்றுகையால் பரபரப்பு.
விருதுநகர் மாவட்டம்,
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலுக்கு சொந்தமான நிலங்கள் குறித்து ஆய்வு செய்த போது இடையபொட்டல் தெருவில் 7 ஏக்கர் 49 சென்ட் பரப்பளவில் ஆண்டாள் கோயிலுக்கு சொந்தமான குசவன் கோயில் நந்தவனம் இருந்தது ஆவணங்கள் மூலம்தெரியவந்தது. இதில் 2 ஏக்கர்18 சென்ட் நிலத்தை கண்டறிந்தஅதிகாரிகள்,
கடந்த 2022-ம் ஆண்டு ஆண்டாள் கோயில் பெயரில் பட்டா பெற்றனர். இதை அடுத்து பட்டா பெற்ற இடத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கட்டுமானங்களை 2023 நவம்பர் மாதம் அளவீடு செய்ததில் 70க்கும் மேற்ப்பட்ட வீடுகள், சூப்பர் மார்க்கெட் உள்ளிட்ட கடைகள், மண்டபம் மற்றும் கருங்கச்சைக்காரன் கோயில் கல் மண்டபம், சக்கரத்தாழ்வார் மற்றும் விநாயகர் கோயிலை சுற்றி உள்ள இடம் வாகன நிறுத்துமிடமாக இருப்பது தெரியவந்தது. மேலும்
கோயில் நிர்வாகம் சார்பில் தனியாருக்கு ஒப்பந்தம் விடப்பட்டது.
கருங்கச்சைக்காரன் கோயில் திருவிழா கொண்டாடுவதற்கு வந்த மக்கள் மண்டபத்தை சுற்றி கொட்டகை அமைக்க கோயில் நிர்வாகம் எதிர்ப்பு தெரிவித்ததால், செயல் அலுவலரை கண்டித்து நூற்றுக்கும் மேற்பட்டோர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது செயல் அலுவலர் சர்க்கரையம்மாள், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளீர்கள். நீதிமன்றத்தில் பார்த்துக் கொள்ளுங்கள் என்றார்.