ஸ்ரீவி: வனப்பகுதியில் வரையாடுகள் எண்ணிக்கை அதிகரிப்பு...

66பார்த்தது
ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் வரையாடுகள் எண்ணிக்கை அதிகரிப்பு.
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் வரையாடுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக வனத்துறையினர் தெரிவித்து உள்ளனர். ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலை அமைந்துள்ளது. இப்பகுதி ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகமாக
அறிவிக்கப்பட்டு பாதுகாத்து வருகிறது. இங்கு யானை, புலி, சிறுத்தை, மான், காட்டு எருமை, சருகு மான், சிங்க வால் குரங்குகள், வரையாடுகள் என ஏராளமான வன விலங்குகள் உள்ளன. இங்கு வனவிலங்குகள் வேட்டையாடுவது தடுக்கப்பட்டு வனப்பகுதியை தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதால் வனவிலங்குகளின் எண்ணிக்கை அதிகரித்து
வருகிறது. ஸ்ரீவில்லிபுத்தூர்
மேகமலை புலிகள் காப்பகத்தில் ஏராளமான வரையாடுகள் உள்ளன. இவை பேய் மலை, மொட்டை மலை போன்ற மலைப்பகுதியில் கூட்டம், கூட்டமாக வசிக்கின்றன. சிறுத்தை மற்றும் புலிகள் வரையாடுகளை வேட்டையாடி உணவாக உட்கொள்ளும். மேலும் இவற்றிடமிருந்து வரையாடுகள் தப்பிப்பதற்காக உயர்ந்த மலைப்பகுதியில் வசிக்கின்றன. தற்போது மலைப்பகுதியில் வரையாடுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் டிரக்கிங் செல்வோர்கள் வரையாடுகளை நேரில் பார்கின்றனர். மேலும் வேட்டையாடுவது தடுக்கப்பட்டு வனப்பகுதி தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதால் வரையாடுகள் எண்ணிக்கை அதிகரித்து உள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி