தமிழ்நாடு தொழில்நுட்ப இயக்கத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் வணிகவியல் எனப்படும் டைப்ரைட்டிங் கற்பதற்காக மாநிலம் முழுவதும் சுமார் 4500 தட்டெழுத்து மற்றும் சுருக்கெழுத்து பயிற்சி மையங்கள் இயங்கி வருகின்றன.
இதில் 6 மாதத்திற்கு ஒருமுறை கிட்டத்தட்ட 2. 5 லட்சம் மாணவ- மாணவிகள் டைப்ரைட்டிங் பயிற்சி பெற்று தேர்வு எழுதுவர். இந்த வணிகவியல் பாடத்திட்டத்திற்கு கடந்த பல வருடங்களாக ஒரே பாடத்திட்டம் கடைபிடிக்கப்பட்டு வந்தது வணிகவியல் பயிலும் மாணவ, மாணவிகளின் தரத்தை உயர்த்துவதற்காக கடந்த 2023 ஆம் ஆண்டு ஜனவரி தொழில்நுட்ப வல்லுனர்கள் குழு புதிதாக பாடத்திட்டத்தினை தேர்வு செய்வது குறித்து முடிவு செய்து வரும் 2025 ஆம் ஆண்டு நடைபெறக்கூடிய வணிகவியல் தேர்வில் புதிய பாடத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என தொழில்நுட்ப கல்வி இயக்க ஆணையர் அறிவிப்பு வெளியிடப்பட்டது..
கிட்டத்தட்ட 40 நாட்களுக்கு மேலாகியும் புதிய பாடத்திட்டத்திற்கான மாதிரி வினாப்படிவம் தற்போது வரை வெளியிடப்படவில்லை என தமிழ்நாடு தட்டெழுத்து மற்றும் சுருக்கெழுத்து பயிற்சி பள்ளிகளின் தலைவர் கோரிக்கை வைத்துள்ளார்.