ஸ்ரீவி: ரயில் பெட்டிகள் குறைப்பு. பயணிகள் ஷாக்...

61பார்த்தது
விருதுநகர் மாவட்டம், தமிழ்நாட்டில் எக்ஸ்பிரஸ் ரயில்களில் ஸ்லீப்பர் பெட்டிகள் குறைப்பு. பயணிகள் ஷாக். இந்தியாவில் ஒவ்வொரு நாளும் ரயிலில் பல லட்சக்கணக்கான மக்கள் பயணம் செய்கின்றனர். அதுவும் பண்டிகை காலங்கள் மற்றும் விடுமுறை காலங்களில் ரயில்களில் பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கை மிக அதிமாக உள்ளது. பண்டிகை காலங்கள் மட்டுமின்றி, சாதாரண நாட்களிலும் ரயிலில் முன்பதிவு டிக்கெட் கிடைப்பது என்பது குதிரை கொம்புதான். ரயில்களில் அதிகரிக்கும் கூட்டம்,
நீண்ட தூரம் களைப்பின்றி வசதியாக பயணம் செய்ய முடியும் என்பதால் மக்கள் ரயில் பயணத்தை விரும்புகின்றனர். ரயில்களின் ஸ்லீப்பர் பெட்டிகளில் அதிகளவு மக்கள் முன்பதிவு செய்து பயணம் செய்து வரும் நிலையில், அண்மை காலமாக ரயில்களில் ஸ்லீப்பர் பெட்டிகள் குறைக்கப்பட்டு ஏசி பெட்டிகள் அதிகரிக்கப்பட்டு வருகின்றன. இதனால் ஏராளமான மக்கள் முன் பதிவில்லாத பெட்டிகளில் பயணம் செய்து வருகின்றனர். அதிலும் பெரும்பாலான ரயில்களில் முன்பதிவில்லாத பெட்டிகள் இரண்டு மட்டுமே இருப்பதால் மக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகிறது. சென்னை-செங்கோட்டை
இதேபோல் நாகர்கோவில் - மும்பை, கன்னியாகுமரி புதுடெல்லி எக்ஸ்பிரஸ் ரயில்களிலும் தலா ஒரு ஸ்லீப்பர் பெட்டிகள் குறைக்கப்பட்டு மூன்றாம் மற்றும் இரண்டாம் வகுப்பு ஏசி பெட்டிகள் இணைக்கபட உள்ளதாக ரயில்வே அறிவிக்கப்பட்டுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி