ஸ்ரீவி: மீண்டும் அரசு மதுபான கடை திறக்க பொதுமக்கள் எதிர்ப்பு.

66பார்த்தது
ஶ்ரீவில்லிபுத்தூர் அருகே மூடப்பட்ட டாஸ்மாக் கடையை மீண்டும் திறக்க ஏற்பாடு. பொது மக்கள் சாலையில் கல்லை வைத்து போராட்டம்.
விருதுநகர் மாவட்டம், ஶ்ரீவில்லிபுத்தூர் அடுத்த கூமாப்பட்டி அம்பேத்கர் தெரு பகுதியில் சுமார் 300 குடும்பங்களை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் செயல்பட்டு வந்த டாஸ்மாக் கடை கொரோனா ஊரடங்கு காலத்தில் மூடப்பட்டது. கொரோனா முடிந்த பிறகு வருவாய் துறையினர் மீண்டும் கடையை திறக்க முயன்ற போது, பொது மக்களின் எதிர்ப்பால் கடந்த 2021 ஆம் ஆண்டு மூடப்பட்டது. கடந்த ஆண்டு ஜனவரி மாதம் வருவாய்த் துறையினர் இந்தக் கடையை திறக்க முயன்ற போது மீண்டும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் டாஸ்மாக் கடை திறக்கப்படவில்லை.
இந்நிலையில் இன்று அதே இடத்தில் மீண்டும் டாஸ்மாக் கடை திறக்க ஏற்பாடுகள் நடப்பதாக தகவல் அறிந்த அப்பகுதி மக்கள் ஆண்கள், பெண்கள் ஏராளமானோர் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து சாலையில் கல்லை வைத்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சட்டம் ஒழுங்கு பிரச்சனை மற்றும் கோஷ்டி மோதல்கள் நடக்க வாய்ப்பு உள்ளதால் பிரச்சனைக்குரிய இடத்தில் டாஸ்மாக் திறக்க கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கோஷங்களை போராட்டத்தின் போது பொது மக்கள் எழுப்பியதால்
அப்பகுதியில் அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்க காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி